Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பியர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

பியர் குடிப்பது நல்லதா? கெட்டதா?
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:07 IST)
பியர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது பல பேருக்கு குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது.  


 


பியர் அருந்தினால் உடல் குளிர்ச்சி அடையும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது.
 
ஆனால் நடுநிலையாகப் பார்த்தோமானால் அதன் உண்மையான ஆரோக்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக்கு வரும்.
 
உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்டமின்கள் உள்ளது.  சிறிதளவே அதில் பி- 6 வைட்டமின் மற்றும் பிற கனிமங்கள் உள்ளன. ஆனால் இவையனத்தும் பியர் தயாரிப்பு முறையில் காணாமல் போகிறது.
 
ஆதி சமூகங்கள் பியர் தயாரிப்பில் ஈடுபட்டபோது இயற்கையான முறைகளில் அதனை தயாரித்ததால் அதன் வைட்டமின் சத்துகள் தக்கவைக்கப்பட்டு ஆல்கஹால் அளவு குறைவாக தயாரிக்கப்பட்டது.
 
ஆனால் இன்றைய நவீன முதலாளிய சமூகங்களில் பியர் தேவைகள் அதிகரிக்க, அதன் உற்பத்தி முறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தானியத்தின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற மாத்தேறலை (மால்டிங்) பயன்படுத்துகிறது. பின்பு சர்க்கரையாக மாற்றப்பட்டது புளிக்கவைக்கப்படும். இது மிகவும் எளிமையான விளக்கமாகும். ஆனால் இதில் சிக்கல் நிறைந்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
 
அயல்நாடுகளில் இதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் இந்திய பியர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் தேவை!
 
அதாவது ஒரு குறிப்பிட்ட தரநிலைகளில் தயாரித்தால் மட்டுமே பியர் அதன் 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க....

ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைத் தக்கவைக்க முடியும், இது சில அயல்நாட்டு பியர்களிலேயே உள்ளது. வடிகட்டு முறையில் பல ஊட்டச்சத்துக்கள் போய் விடும்.
 
355மிலி பியரில் உள்ள 150 கலோரிகளில் இரண்டில் மூன்று பங்கு இருப்பது வெறும் ஆல்கஹால்தான், மீது ஒன்றில் மூன்று பங்கு சர்க்கரை உள்ளது. புரோட்டீன் அளவு மிகவும் குறைவு அதனால் எந்தவித பயனும் இல்லை என்றே கூறிவிடலாம்.
 
எனவே பியரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உண்மையல்ல. ஆல்கஹாலதான் அதிகம் உள்ளது. மேலும் பியர் குடிப்பவர்களில் சிலர் 'அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை நான் 3 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான், 2 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான்' என்பார்கள் ஆனால் ஒரு லிட்டர் பியரில் உள்ள கலோரியின் அளவு 600! இதுதான் உடல் எடை அதிகமாகக் காரணமாகிறது. மேலும் அதிகமாக பியர் குடிப்பதினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கநேரிடும் இதனால் பியரில் உள்ள குறைவான சில சத்துகளும் சிறுநீரில் வெளியேறிவிடுவதுதான் நடக்கும்.
 
'நான் சரக்கு அடிப்பதில்லை பியர் மட்டும்தான் அடிக்கிறேன் மச்சி என்று கூறும் நண்பர்களை எச்சரியுங்கள், பியர் மீதான இந்த தவறான நம்பிக்கைகளால் அது அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் வற்றுகிறது. இதனால் அதிக பியர்கள் தேவைப்படுகிறது. இதனையடுத்து பியர் அடிமைகளாகிவிடுவதுதான் நடைபெறுகிறது.
 
மேலும் பியருடன் நாம் என்ன சைட் டிஷ் சாப்பிடவேண்டும் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். உருளைக்கிழங்கு சிப்ஸ், கடலை, பட்டாணி என்று சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம் ஆனால் இதுபோன்ற உப்புக்கார பொருட்களால் தாகம் அதிகம் எடுக்கும் மேலும் பியர்கள் குடிப்போம்! எனவே சாலட்கள், கடல் உணவுகளான மீன், முட்டை, இறைச்சி கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
 
பியரில் இருக்கும் குறைவான நன்மைகளின் பயன்களை உடல் பெறவேண்டுமென்றால் குறைவாகக் குடிப்பதே சிறந்தது.

Share this Story:

Follow Webdunia tamil