Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீன்ஸில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளன தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (10:32 IST)
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
 
பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக்  குறைக்கிறது.
 
பீன்ஸில் உள்ள வைட்டமின் பி-12 கருவுற்ற பெண்களுக்கு கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது. பீன்ஸில் வைட்டமின் பி-6, தையமின், வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
 
பீன்ஸை உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான சக்தி அதிகரிக்கும். வாயுத்தொல்லை நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
 
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
 
பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப்  போக்கும்.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments