புடலங்காய் சமைத்து சாப்பிடுவதால் நன்மைகள் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (23:53 IST)
டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது.
 
 
காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகா‌ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.
 
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல்  மறைந்து போகும்.
 
புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால்  இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
 
அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். 
 
இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments