Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் அதிக உப்பு உள்ள உணவை சாப்பிடலாமா?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (09:16 IST)
இனிப்பு போல உப்பையும் தினசரி இவ்வளவுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் பலரும் காரசாரமாக உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிடுகிறோம். இவ்வாறு சாப்பிடுவதால் என்னாகும் என பார்ப்போம்



உப்பில்லா உணவு குப்பைக்கு என்பது பழமொழி. அந்த அளவு உணவில் உப்பின் தேவை சுவைக்காகவும், அயோடின் சத்துகளுக்காகவும் அவசியமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் சர்க்கரையை போல உப்பையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

பொதுவாகவே உப்பு அதிகமான உணவை சாப்பிட்டால் தாகம் அதிகமாக எடுக்கும். குழந்தைகள் உப்பு அதிகமான உணவை சாப்பிடும்போது சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

குழந்தைகள் அதிக உப்பை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. உப்பு அதிகமான உணவை சாப்பிடுவது குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்க செய்யும்.

1 முதல் 3 வயது வரையில் உள்ள குழந்தைகள் தினசரி 2 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினசரி 3 கிராமுக்குள் உப்பு எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை போல உப்பையும் அளவாக பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கெடுதலா?

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

'டி-ஹைட்ரேஷன்' எனும் நீரிழப்பு.. கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து..!

தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பதின்பருவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments