Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினம் ஒரு நெல்லிக்காய்... என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (14:30 IST)
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
விரைவில் செரிமானம் அடைய தினமும் சாப்பிடுமுன் நெல்லிக்காய் ஒரு துண்டு மென்று அந்த சாறை விழுங்கினால், செரிமான பிரச்சனையில் இருந்து  விடுப்படலாம். 
 
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை மென்று அந்த சாறை முழுங்கினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
 
நெல்லிகாயில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. அதனால் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க  உதவுகிறது. 
 
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு முறைக்கு மூன்று முறை உலர்ந்த நெல்லிகாயை மென்று அந்த சாறை மட்டும் விழுங்கினால் போதும். 
 
நெல்லிகாயில்  உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வாயில் உள்ள துர்நாற்றங்களை அகற்றி வாயை சுத்தமாக வைத்துக்கொள்கிறது. 
 
நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை எதிர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments