Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (00:53 IST)
எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும் உள்ளது. இதிலுள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்வதில்லை.
 
பேரிக்காய்: பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும், இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் வலுப்பெறும்.
 
நாவல்பழம்: கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அருமருந்து.
கொய்யா:செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. 
 
பேரீச்சம்பழம்: ரத்த விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண் கோளாறுகள் வராது. இருமல், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
 
சத்துக்குடி: பசியைத் தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.
 
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து, நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள்  நீங்கும்.
 
சீதாப்பழம்: மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன், பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும். இதயம் பலப்படும்.
 
ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும்,  பல் சொத்தை வராது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments