Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

Mahendran
சனி, 17 மே 2025 (17:30 IST)
இப்போது பெரும்பாலான பெண்கள் ‘கிளீன் ஷேவ்’ முகத்தைவிட, தாடியுடன் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் பல ஆண்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பது மட்டுமல்ல, அதை நன்றாக பராமரிப்பதும் அவசியம். சரியான பராமரிப்பு இல்லாமல் தாடி பரிதாபமாக மாறக்கூடும். அதற்கு சில எளிய வழிமுறைகள் இங்கே:
 
தாடி வளர்க்க திட்டமிட்டுள்ளீர்களானால், முதல் ஒரு வாரம் தினமும் கிளீன் ஷேவ் செய்யுங்கள். இது தாடி ஒத்த முறையில் வளர உதவும்.
 
தாடி வளர்ச்சி பராமரிப்பிலும் கவனம் தேவை. ஒழுங்காக டிரிம் செய்யாமல் விட்டுவிட்டால், தாடி அசிங்கமாகவும் சீரற்றதாகவும் தெரியும்.
 
அழகான, மென்மையான தாடிக்காக, வாரத்தில் இருமுறை தாடிக்கு ஷாம்பு போடுவது நல்லது. தாடிக்கென தனித்த ஷாம்புகள் கிடைக்கும், அவற்றை பயன்படுத்தலாம்.
 
ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் தேவை. இது தாடி முடியை மென்மையாக்கும். சுத்தம் செய்யும்போது நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவுங்கள், இல்லையெனில் வேதிப்பொருட்கள் தாடியில் சிக்கியிருக்கும்.
 
தாடிக்கு தனியான சீப்பு வைத்துக்கொள்ளுங்கள். தலைக்கு பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்த வேண்டாம், குறிப்பாக பொடுகு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டும்.
 
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயை தாடிக்கும் போடலாம். இது வேர்களை பலப்படுத்தும், தாடியின் நிறம் மாறுவதையும் தடுக்கும்.
 
தாடி வளர்க்கிறீர்கள் என்றால், அதையும் குழந்தையைப் போல கவனிக்க தான் வேண்டும்!
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments