Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் திறனற்றுப் போகும் நிலை- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (11:26 IST)
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையை சமாளிக்க பெரும்பாலான நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


 
இது மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று அந்த நிறுவனம் வர்ணித்திருக்கிறது.
 
இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது.
 
ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை குணப்படுத்த முடியாமல் போகும் நிலையை எதிர்த்து நடவடிக்கைகள் எடுக்க உலகளாவிய வகையில் எடுக்கப்படவுள்ள ஒரு திட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments