Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் இஞ்சி

உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் இஞ்சி

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (16:44 IST)
இஞ்சி பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.


 
 
காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும், மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும், மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.
 
இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த, கப நோய்கள் நீங்கும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும். காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம் பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.
 
பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும்.இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
 
இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
 
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
 
வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்