Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாட உணவில் கேரட் சேர்த்தால் இத்தனை நன்மைகள் உண்டா...?

Webdunia
கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய்  தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம்  தீர்வு கிடைக்கும்.



வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.
 
வைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு  நல்ல பலன் தரும். 
 
ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப்  பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது. 
 
கேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முதுமை காரணமாக  ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டாகேரட்டின் தடுக்கிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகளை விட கூடுதல் பலனை தருகிறது  கேரட்.
 
ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல்  அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.
 
கேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மை நீங்கி கண்  பார்வை கூர்மையாகும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்தை தீர்க்கும். 
 
கேரட் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்திலும் கண்பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் நம்மை  அண்டாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments