Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுறவு சேட்டிங்கில் பிரிட்டன் குழந்தைகள்

பாலுறவு சேட்டிங்கில் பிரிட்டன் குழந்தைகள்
இணையதள உரையாடல் (Internet chatting) என்பது மிகவும் சாதாரணமாகி விட்ட நிலையில், பிரிட்டன் குழந்தைகளில் 10 விழுக்காட்டினர் ஆன்லைன் உரையாடலின் போது, பாலுறவு தொடர்பான விவரங்களை பரிமாறிக் கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.

11 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினரில் இந்த உரையாடல் விழுக்காடு 25 ஆக உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இவர்கள் வயது வந்தோர் மட்டுமே செல்லக்கூடிய இணைய தளங்களை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இதில் வேடிக்கைக்குரிய அம்சம் என்னவென்றால், குழந்தைகளில் முதல் உரையாடலில் ஈடுபடுவோரில் 10 விழுக்காட்டினர், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சில நேரங்களில் பெற்றோர் தங்களின் குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்றே தெரிந்து கொள்வதில்லை என்றும், பாதி குழந்தைகள் பெற்றோரிடம் பொய் கூறி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் ஹோம்வொர்க் (Homework) செய்வதாகக் கூறிவிட்டு, பல நேரங்களில் அவர்கள் இணையதளங்களைப் பார்ப்பதிலோ அல்லது சமுதாய நெட்வொர்க் இணைய தளங்களிலோ நேரத்தை செலவிடுவதாகவும் அந்த கணிப்பு கூறுகிறது.

தாங்கள் ஆன்லைனில் என்ன செய்கிறோம் என்பதை தங்களது பெற்றோர் தெரிந்து கொண்டால், அது தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று மூன்றில் ஒரு குழந்தைகள் தெரிவிக்கிறார்கள்.

எனவே உங்கள் குழந்தைகள் அதிக நேரம் இண்டர்நெட்டில் செலவிடுகிறார்களா? உஷாராகுங்கள் பெற்றோர்களே!

Share this Story:

Follow Webdunia tamil