Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ்

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (14:59 IST)
சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் ( Strokes) எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.

உணவில் அதிகளவில் சோயாபீன்ஸ், கொண்டைக் கடலை உள்ளிட்ட புரதச் சத்துகள் நிறைந்த பயறு வகைகளை எடுத்துக் கொள்வதால், அவற்றில் காணப்படும் இஸோஃப்ளேவோன் ( isoflavone), பக்கவாத நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய இதய மருத்துவ இதழில் அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments