Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு பலம் தரும் சூப்கள் - 2

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2013 (17:40 IST)
FILE
உடலுக்கு பலம் தரும் சூப்கள் வரிசையில் ஆவாரம் பூ மற்றும் முடக்கற்றான் சூப்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களைப் பார்ப்போம்.

அழகை வர்ணிக்க 'ஆவாரம் பூவே' என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்க பஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.



ஆவாரம் பூ சூப்:

தேவையான பொருட்கள்:

ஈர ஆவாரம்பூ - 1 கப்
( அ) உலர்ந்த ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மிலி
கேரட் - 1
பீன்ஸ் - 5
தக்காளி - 1
வெங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி, புதினா - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

FILE
முடக்கற்றான் அதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.








முடக்கற்றான் சூப்:

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments