Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுர்வேத மருந்து விதிமுறைகளில் திருத்தம்!

ஆயுர்வேத மருந்து விதிமுறைகளில் திருத்தம்!
, புதன், 12 நவம்பர் 2008 (12:24 IST)
இந்தியாவில் ஆயுர்வேதம் என்பது மிகவும் பழமையான மருத்துவ முறையாகும். என்றாலும் இந்த முறையை உலக அளவில் பிரபலப்படுத்துவதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது.

தற்போது, இந்த ஆயுர்வேத மருத்துவ முறையானது, மற்ற நவீன மருந்துகளைப் போன்று புதிய வடிவத்தைப் பெறவுள்ளது.

மற்ற மருத்துவ முறைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளைப் போன்று, பாதுகாப்பான, வண்ணமயமான சிகிச்சையை ஆயுர்வேதமும் பெறவுள்ளது.

1945ஆம் ஆண்டு மாத்திரைகள், வாசனைத் திரவியங்கள் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் (அக்டோபர் 23) திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மாத்திரை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஆன்டிஆக்சிடன்ட்ஸ், வாசனை அளிக்கக் கூடிய பொருட்கள், இனிப்பைத் தரக்கூடிய பொருட்களைச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யக்கூடிய அமைப்பினால், ஆயுர்வேத மருந்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்யவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுர்வேதத் துறை சார்பில் கடந்த நிதியாண்டில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், தற்போது ஆயுர்வேத மருந்துகளுக்கு புதிய தளர்வு அளிக்கப்பட்டிருப்பதால், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் குழுவின் மூத்த உறுப்பினர் டி.பி. அனந்த நாராயணா கூறுகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினருடன் 2 ஆண்டுகள் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார

Share this Story:

Follow Webdunia tamil