Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களை விட பெண்களுக்கே ரத்த அழுத்தத்தால் ஆபத்து அதிகம் : ஆய்வு

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2014 (17:06 IST)
FILE
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளில் உள்ள குறிப்பிட்ட வேறுபாடுகள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தத் தகவல் வெளியானது.

”இதற்கு முன்னால் ரத்த அழுத்தம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் ஒன்று என்றும் மருத்துவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் சார்லஸ் பெர்ராரியோ.

”உண்மையில் அமெரிக்காவில் இதய நோய் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே விதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் போது, இந்த முரண்பாடு எதனால்?” என்று கேள்வி எழுப்புகிறார் ஃபெர்ராரியோ.

ஆண்களும், பெண்களுமாக 100 பேரை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக 30 முதல் 40 சதவீதம் பாதிப்புகள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

‘இதனால் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் தரம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியம்’ என்று இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments