Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேன்சருக்குத் தூண்டுகோலா?

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2012 (18:13 IST)
FILE
கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குறிப்பாக ஃபாஸ்ட் புட் கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு வருவலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் உருவாவதாக லண்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸில் அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அது செய்யப்படும் விதங்களில் பிரச்சனை இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது விற்பதற்கு முன்பாக பாதி வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு வருவல் விற்கப்படும் முன் மீண்டும் முழுதுமாக வறுத்துக் கொடுக்கப்படுகிறது.

இதனால் அக ்ர ைலமைட் ( acrylamid e) என்ற ரசாயனம் அதில் உருவாகிறது. இது புற்று நோய் உருவாக்க ரசாயனமாகும் என்று லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் இதழ் கடந்த மாதம் ஆய்வின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ரீடிங் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்திய போது காய்ந்த, உறைந்த உருளைக்கிழங்கு விற்கப்படும் முன் இரு முறை வறுக்கப்படுகிறது அல்லது சமைக்கப்படுகிறது இது மிகவும் சகஜமாக உள்ள நடைமுறைதான்.

இது மட்டுமல்லாது 120டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான ஹீட்டில் செய்யப்படும் பிஸ்கட்கள், ரொட்டிகள், சிப்ஸ்கள் ஆகியவற்றில் இந்த அக்ரைலமைட் என்ற கார்சினோஜென் உருவாகிறது.

ஜர்னல் ஆஃப் அக்ரிக்கல்ச்சர் அன்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி என்ற இதழில் இது பற்றி அறிக்கை வெளியானபோது, சிப்ஸ் தயாரிப்பாளர்கள், பிஸ்கட், ரொட்டி தயாரிப்பாளர்கள் தாங்கள் இவற்றை சமைக்கும் முறையை மாற்ற வலியுறுத்தியுள்ளது.

இதற்கு எளிமையான தீர்வு உருளைக்கிழங்கை செய்யும் விதத்தில் மாற்றம் தேவை. அதனை அதிகம் போட்டு வறுப்பது கூடாது. முதலில் அரைகுறையாக சமைத்துப் பிறகு விற்கப்படும் முன் மீண்டும் அதனை நன்றாக வறுப்பதைத் தவிர்த்தாலே போதுமானது என்கிறது இந்த ஆய்வு.

உருளைக்கிழங்கு வருவலை சற்றே பொன்னிறமாக வறுத்தெடுப்பது சிறந்தது. ஓவராக வறுத்தெடுக்கவேண்டாம் என்றே அறிவுரை வழங்குகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments