Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலுறவைத் தூண்டும் கழுதைத் தோல்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (18:21 IST)
பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.

தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சிட்னியைச் சேர்ந் தஅ ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.

கழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.

கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments