Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழுக்கை தலை.........

வழுக்கை தலை.........
, சனி, 14 டிசம்பர் 2013 (15:12 IST)
உலக அளவில் ஆண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை உள்ளது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்று விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள்.
FILE

வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள். கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பல வகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்பதே உண்மை.

ஆனால் இதற்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்...

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
webdunia
FILE

அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.

மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்து பேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும். டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஐஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்க வேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார். ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி - பசுமை இந்தியா

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil