Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது
, சனி, 21 செப்டம்பர் 2013 (14:50 IST)
FILE
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தõக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும்.

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஓவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.

எனவே பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் ரத்தஅழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா.

எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஓருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்றும் நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடியதும், பக்கவிளைவுகளற்ற சிகிச்சை முறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.

அதே சமயம் நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலும் ஆய்வுகள் செய்வது அவசியம் என்கிறார் அம்ரிதா அலுவாலியா.

இந்த ஆய்வின் முடிவுக்குக் காத்திராமல் பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை. அதே சமயம் பீட்ரூட் சாறு அருந்துபவர்சிறுநீர் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும் என்று கூறுகிறார்.

நன்றி: பசுமை இந்தியா மாத இதழ்!

Share this Story:

Follow Webdunia tamil