Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானது அல்ல!

பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானது அல்ல!
, வெள்ளி, 25 ஜனவரி 2013 (13:16 IST)
FILE
பாட்டிலில் அடைக்கப்படும் தண்ணீர் குழாயில் வரும் தண்ணீரை விட பாதுகாப்பானது அல்ல,சுகாதாரமானது அல்ல என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இதனை கண்டுபிடித்துள்ளனர். இன்று குழாய் நீர் ஏதோ பாதுகாப்பற்றது என்பது நிரூபிக்க படாத உண்மையாகவே மாறி ஒவ்வொரு வீட்டிலும் குடிநீரை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர், அதுவும் பெரிய பிளாஸ்டிக் கேன்களிலேயே அது இருக்கிறது. தொடர்ந்து அதையே குடிட்த்தும் வருகிறோம்.

மறாக குழாய்த் தண்ணீரில் உள்ள சிறிய அளவிலான குளோரின், பாக்டீரியாவிலிருந்தும் நோய் உருவாக்க கூறுகளிடமிருந்தும் நம்மை காக்கிறது. மாறாக மினரல் வாட்டர் தயாரிப்பாளர்கள் ஒரு முறை அதனை சோதனை செய்து பாட்டிலில் அடைத்து விட்டால் அவ்வளவுதான் மாதக்கணக்கில் அந்த நீர் அப்படியே உள்ளது.

மேலும் பாட்டில் தண்ணீரில் குளோரின் போன்ற நோய்த் தடுப்பு சக்திகள் முற்றிலும் இல்லவேயில்லை. இதைத்தான் சுத்தமான தண்ணீர் என்று நம்மை அந்த நிறுவனங்கள் நம்ப வைக்கின்றன. மேலும் மிஅரல் என்று பல மூலக்கூறுகளை லேபிளில் பட்டியலிடுகின்றன. அவையெல்லாம் பிரிசர்வேட்டிவ்களே.

மேலும் குழாய் நீரை சுட வைத்து குடிநீராக பயன்படுத்தலாம் ஆனால் மினரல் நீரை நாம் நேரடியாக பயன்படுத்துகிறோம் ஒரு முறை அதன் சீலிடப்பட்ட மூடியை திறந்து பயன்படுத்தத் தொடங்கினால் அதன் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை.

திறந்த உடனேயே அதனை நாம் பயன்படுத்திவிடவேண்டும். ஆனால் நாம் அப்படியா செய்கிறோம். இரண்டு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் கேன் வாங்குகிறோம்.

ஆகவே குழாய் தண்ணீரே பாட்டில் குடிநீரை விட சுகாதாரமானது என்கிறார்கள் பிரிட்டன் ஆய்வாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil