Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உறுதியான எலும்பு பலவீனமடைய காரணம் என்ன?

உறுதியான எலும்பு பலவீனமடைய காரணம் என்ன?
, புதன், 12 டிசம்பர் 2012 (19:39 IST)
FILE
நமது எலும்பின் உறுதியில் புரோட்டீன் ஆஸ்டியோகால்சின் என்ற ஒரு பொருளின் பங்கு குறித்து இதுவரை சரியான புரிதல் ஏற்படவில்லை என்று கூறும் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்களது புதிய ஆய்வில் எலும்புகள் தேய்மானம் அடைவதற்குக் காரணம் என்ன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரின் தலைமையில் ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் எலும்புத் தேய்மானம் அல்லது ஆஸ்டியோ பொரோசிஸ் என்ற எலும்புத்துளை நோய்க்கு புதிய மருத்துவ உத்திகள் கண்டறியப்படலாம் என்று தெரிகிறது.

அமெரிக்க சுகாதார தேசிய நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆரோக்கியமான, உறுதியான் எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத துளைகள் ஏற்படுகிறது என்றும் எலும்பின் கனிம அமைப்பில் 500 அணுக்களே சுற்றளவு கொண்ட இந்த ஓட்டைகள்தான் எலும்புத் தேய்மானத்திற்கும் எலும்பு முறிவிற்கும் பெரிய காரணமாக அமைந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

கீழே விழுதல், வழுக்கி விழுதல், அல்லது நொடி போன்றவற்றில் தவறி விழுதல் போன்றவற்றினால் ஆஸ்டியோபான்டின், மற்றும் ஆஸ்டியோகால்சின் என்ற இரண்டு புரோட்டீன்களில் தாக்கம் ஏற்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படா துளைஅக்ளை ஏற்படுத்துகிறது. இந்த துளைகள் உண்மையில் எலும்பை பாதுகாக்க ஏற்பட்டாலும், கீழே விழும்போது தாக்கம் அதிகமிருப்பதால் ஆஸ்டியோகால்சின், ஆஸ்டியோபான்டின் இல்லாத எலும்புகளை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்குகிறது.

தீபக் வஷிஷ்த் என்ற இந்திய வம்சாவளி ஆய்வாளர் இது போன்ற நுண்ணிய பாதிப்புகளை தற்போது அடையாளம் கண்டுள்ளார்.

எலும்பு முறிவு ஏற்படுவது ஆஸ்டியோகால்சினில்தான் எனும்போது ஆஸ்டியோகால்சினை மேலும் பலப்படுத்தினால் எலும்பு முறிவை தடுக்கலாம் என்று வாஷிஷ்த் கூறுகிறார்.

ஆஸ்டியோகால்சின் தற்போது டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் குழந்தைப்பேறு சுகாதாரம் போன்றவற்றிலும் தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் கே- ஆஸ்டியோகால்சினை பலப்படுத்துமா என்பதை எதிர்கால ஆய்வுகள் உறுதி செய்யவேண்டும் என்றார் வஷிஷ்த்.

இதுவரை எலும்பு தொடர்பான சிகிச்சையில் கால்சியம் முக்கியப் பங்கு வகித்தது. இனி வைட்டமின் கே புதிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பச்சை காய்கனிகளில் வைட்டமின் கே சத்து உள்ளது. கீரைகள், பசலை வகை கீரைகள் எலும்ப்பை உறுதிப்படுத்துமா என்பதை எதிர்கால ஆய்வுகள் கண்டறியும் என்கிறார் விஞ்ஞானி வஷிஷ்த்.

இவரது ஆய்வு முடிவுகள் தேசிய அகாடமி ஆஃப் சயன்சஸில் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil