Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய, ஆப்பிரிக்க நோயாளிகளின் வாழ்க்கையில் விளையாடும் ரான்பாக்ஸி

இந்திய, ஆப்பிரிக்க நோயாளிகளின் வாழ்க்கையில் விளையாடும் ரான்பாக்ஸி
, திங்கள், 27 மே 2013 (14:51 IST)
FILE
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் ஒன் மருந்து உற்பத்தி நிறுவனமான ரான்பாக்சி நிறுவனம் மோசடியான தனது மருந்து உற்பத்தி நடைமுறைகளுக்காக அமெரிக்க மருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு 500மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்திய செய்தி மருத்குவ உலகை அதிர்ச்சிக்குள்ளக்கியது.

அமெரிக்காவிற்கு ஜானரிக் மருந்துகளை அனுப்ப ரான்பாக்ஸி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஜானரிக் என்றால் சிப்ரோபிளாக்சசின், அல்லது அமாக்சிசிலின் என்ற பெயரிலேயே இருக்கும். நிறுவனத்தின் பிராண்டட் பெயர் இருக்காது. அதாவது வணிகப்பெயர் இல்லாத அந்த பார்முலேஷன் பெயரிலேயே இருப்பதற்குப் பெயர்தான் ஜானரிக் என்று பெயர்.

இவ்வகையான ஜானரிக் மருந்துகள் 30-ஐ அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை செய்தது. இந்த ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை ரான்பாக்ஸி ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தியது!

ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மருந்து உற்பத்தி நடைமுறைகள் மீது அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் 7 விதமான மோசடிகளை அம்பலப்படுத்தியது. இந்த அத்தனைப் புகார்களையும் ஏற்றுக் கொண்டுதான் ரன்பாக்ஸி அபராதம் செலுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்கொத்திப்பாம்பாக செயல்பட்டு வருவது உலகம் அறிந்ததே. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா பொன்ற ஊழல் நாடுகளில் இந்தக் கண்காணிப்பு சாத்தியமா என்பதே நமது தலையாய பிரச்சனை!

2008ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனமான டாய்ச்சி சான்க்யோ நிறுவனத்திற்கு ரான்பாக்ஸி நிறுவனம் விற்கப்பட்டது. ரான்பாக்ஸி முதலாளிகளான மன்வீந்தர் சிங், மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் 2 பில்லியன் டாலர்கள் தொகை பெற்றனர்.

கம்பெனியை வாங்கிய டாய்ச்சி சான்க்யோ தொடர்ந்து மன்வீந்தர், ஷிவேந்தரையே வர்த்தகத்தை கவனிக்க விட்டதே இத்தகைய பெரிய மோசடிக்க்கு காரணம் என்று தற்போது கூறப்படுகிறது.

ரான்பாக்ஸி இயக்குனர் தினேஷ் தாக்கூர் என்பவர்தான் முதலில் மோசடியை அம்பலப்படுத்தினார். ரான்பாக்ஸி விஞ்ஞானிகள் மருந்து உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களில் மலிவான ரகங்களை பயன்படுத்துவதை அம்பலப்படுத்தினார். ஆனால் டெஸ்டில் பாஸ் ஆக ரான் பாக்ஸி நிறுவனத்தின் பிராண்டட் மருந்துகளின் இடுபொருட்களை கொடுக்கவேண்டியது!

மேலும் தரவுகளில் மோசடி செய்துள்ளனர். இதனை யு.எஸ். எஃப்.டி.ஏ. துல்லியமாக கண்டுபிடித்தது. மேலும் இந்த விவகாரம் ரான்பாக்ஸியின் அனைத்து முன்னணி அதிகாரிகளுக்கும் தெரியும் என்று வினோத் தாக்கூர் மேலும் ஒரு குண்டை வீசினார்.

வெளியேறிய முன்னாள் ரான்பாக்ஸி அதிகாரியான கேத்தி ஸ்ப்ரீன் என்பவர் மேலும் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்பிரிக்க நாட்டிற்கு ரான்பாக்ஸி அனுப்பும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் தரமற்றவை என்றார். கறுப்பர்கள் செத்தால் யார் கவலைப்படப்போகிறார்கள்? என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

அடோர்வஸ்டாடின் என்ற மருந்தை நன்றாக விற்று வந்த ரான்பாக்ஸி நிறுவனம் நவம்பர் 2012ஆம் ஆண்டு மருந்தில் கண்ணாடித் துகள்கள் இருந்ததால் அனைத்து மருந்து மாதிரிகளையும் திரும்பி பெற்றதும் நடந்துள்ளது.

இந்தியாவிலும் ஜானரிக் மருந்துகளை பயங்கரமாக விற்றுக் கொழுத்து வருகிறது ரான்பாக்சி நிறுவனம். இங்கு அமெரிக்கா போல் இல்லை. கவுண்டரில் மருந்துகளை அங்கு வாஙக முடியாது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் இங்கு கிராமங்களில் ஏன் நகரங்களில் கூட மருத்துவர்களின் கன்சல்டிங் கட்டணக்கொள்ளைகளிலிருந்து தப்பிக்க தாங்களே மருந்துகளை மருந்துக் கடைகளில் கேட்டுப்பெரும் பழக்கம் உள்ளது. அப்போது இந்த ஜானரிக் மருந்துகளை பெரும்பாலும் கொடுப்பார்கள் ஏனெனில் இது வணிக முத்திரைபெற்ற அதே மருந்தைக் காட்டிலும் விலை குறைவு.

இந்தியாவில் பல நிறுவனங்கள் இந்த 'காமன் டிரக்' மருந்துகளை பயங்கரமாக விற்று வருகின்றன. இவற்றின் உற்பத்தி முறைகள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா என்பதெல்லாம் தெரியவில்லை.

அமெரிக்கா ரான்பாக்ஸி நிறுவனத்திற்கு மட்டும் இத்தகைய கெடுபிடிகளை வைத்திருக்கவில்லை. கிளேரிஸ் லைஃப் சயன்ஸஸ், லூபின், கெடிலா, அரபிந்தோ, வோக்கார்ட் போன்ற நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலி உள்ளது

வோக்கார்ட் நிறுவனம் ஔரங்காபாத்தில் தயரிக்கும் ஜானரிக் மருந்துகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதனால் நிறுவனத்தின் ஏற்றுமதி விற்பனைகளில் 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது அந்த நிறுவனத்திற்கு. பங்குகள் விலை 20% வரை சரிந்தது.

பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று போராட்டம் செய்தால்தான் இந்திய மருத்துவத் துறையின் ஊழல்கள் அம்பலமாவதோடு, மக்களும் பிழைப்பார்கள்.

மருந்துகளில் தரமற்றவை சந்தைகளில் புழங்கும்போது அதனை எடுத்துக் கொள்ளும் உடல்கள் உடனடியாக பாதிப்படையாது, ஆனால் நாளாக நாளாக இனம் புரியாத நோய்கள் ஏற்படலாம்.

அரசு உடனடியாக இதனை கவனிப்பது நல்லது. ஊடகங்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் பிசியாக உள்ளன. இதுபோன்ற வாழ்வாதார பிரச்சனைகளை அது கையில் எடுப்பதில்லை. பரபரப்பு நோக்கி மக்களை திசை திருப்பி வருகிறது இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil