கோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது
கோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது
குழந்தைகளை பொறுத்தவரை குளிர்தென்றல் அல்ல. கோடைவெப்பம் அவர்களின் உடல் நிலையை அதிக அளவில் பாதிக்கிறது.
கோடைகாலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்களின் வரிசையில் முதலிடம் பெறுவது சூரிய வெப்பம். நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ குழந்தைகளை பாதிப்பதால்தான், சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலினால் குழந்தைகளை தாக்கும் நோய்களைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
உஷ்ணத்தால் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு. இதில் முதலில் இடம்பெறுவது. அதாவது உஷ்ணத்தின் பாதிப்பால் ஏற்படும் மயக்கநிலை. நோய் ஏற்பட காரணங்கள். சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும் நேரங்களில் குழந்தைகள் வெளியில் உலாவருதல், விளையாடுதல், உடற் பயிற்சி செய்தல்.
நோய் அறிகுறிகள். தலைவலி, கால்களின் தசை நார்களில் சுருக்கு, வியர்வை அதிக அளவில் வெளியேறுதல், சோர்வு, தலை சுற்றல், பின்னர் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
தோல் வெளிறி விடுவதும், உடம்பி்ன் சூடு அதிக அளவுக்கு குறைந்து விடுவதும் உண்டு. நாக்கு வறட்சியடைந்து விடலாம். கண்கள் குழி விழுந்து காணப்படும். தோல் சுருங்கி விரியும் தன்மை இழந்துவிடும் வாய்ப்புண்டு. சிறுநீர் வெளியேறுவது குறைந்து காணப்படும். இரத்த அழுத்தம் குறைந்துவிடும். உடலில் இருந்து வெளியேறும் உப்புச் சத்தின் அளவு குறையக்குறைய குழந்தை அதிக அளவு பாதிக்கப்படுகிறது. சாதாரணமாக குழந்தைகளுக்கு அதிகமான வியர்வை வெளியேறும். இதுபோன்ற நேரங்களில் இழந்த நீரின் அளவை ஈடுகட்ட அதிக அளவு நீரை மட்டும் உட்கொள்வது உண்டு. உப்புச்சத்து இதனால் ஈடு செய்யப்படுவதில்லை.
இதை நிவர்த்தி செய்வது எப்படி?
சாதாரணமாக உடற்பயிற்சி செய்யும்போதும், விளையாடும்போதும் வியர்வை அதிகம் வெளியேறும். கோடை காலத்தில் இதன் அளவு அதிகரிக்கும்.
அப்போது உடம்பு தளர்ச்சி ஏற்படும். உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு ஏற்படும் தாகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அரை லீட்டர் அளவு நீர் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி அளவு சமையல் உப்பை எடுத்துக் கலந்து அருந்தினால் இழந்த நீரையும், உப்புச் சத்தையும் எளிதில் பெற முடியும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை முறை:
நாடித்துடிப்பு, குறைந்து அதிக சோர்வுற்று மயக்க நிலையில் காணப்படும் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
மருத்துவ நிபுணரின் தீவிர கண்காணிப்பு இந்த குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
அதிக வியர்வை சுரப்பதின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு. அதிக வெயில் காலங்களில் இது சிறிய கைக்குழந்தைகளையும் சிறிய குழந்தைகளையும் பாதிக்கின்றது. வீட்டின் உட்பகுதியில் இருக்கும் குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகிறார்கள்.
உயரம் குறைந்து அமைக்கப்பட்ட சிறு குடிசைகள், வீடுகள், மற்றும் வீட்டின் கூரையில் வேயப்பட்டிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் மற்றும் ஓடு்கள் வெப்பத்தை அதிகம் பிரதிபலிப்பதே இதற்கு காரணங்களாகும். காற்று வசதி குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தன்மை அதிகமாக இருக்கும்.
சிகிச்சை முறை:
காற்றோட்டமான அறையில் குழந்தையை கிடத்தவும். உப்பு கலந்த நீரை பருகச் செய்யவும். மயக்க நிலையில் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுதல் நலம். வெப்பத்தின் கடுமையால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்.
இது மூளையின் செயலிழப்பதால் ஏற்படுகிறது. அதாவது உடம்பில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் மூளையின் வெப்பக் கட்டுப்பாடு பகுதி செயலிழந்து விடுவதால் இது ஏற்படுகின்றது.
டெட்டோல் கலந்த நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகக் கழுவி பின்னர் துடைக்கவும், அதில் Talcum Powder கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். அல்லது சந்தணத்தை அரைத்து, குழைத்து எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பயன்ஏற்பட வழியுண்டு.
குழந்தைகளை அடிக்கடி எண்ணெய் குளியல் செய்வது நலம் அல்லது முழு உடம்பிலும் காய்ச்சி ஆறவைத்த எண்ணெயைத் தடவி பின்னர் குளிக்க வைப்பதும், தூய்மைப்படுத்துவதும் சிறந்தது. அல்லது பாசிப்பயறையும், மஞ்சளையும் அரைத்து உடம்பில் பூசுதல் நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
கடைகளில் கிடைக்கும் கூல் ட்ரிங்ஸ் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே பழ சாறுகளை தயாரித்து கொடுக்கலாம். அதிக அளவிளான பழங்களை கொடுப்பதினால் உடலை குளிர்ச்சியுடன் வத்திருக்க முடியும்.