Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை இலையில் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (06:44 IST)
நமது முன்னோர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் நாகரீகம் வளர வளர வாழை இலையை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம், வாழை இலையில் சாப்பிடுவதால் உணவின் ருசி அதிகரிப்பது மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்வோமா?





வாழை இலையில் உணவை வைத்து சாப்பிடுவதால் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கும் என நமது முன்னோர்களின் சித்த மருத்துவம் சொல்கிறது.

கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் வாழை இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும். இதன்மூலம் உணவின் விஷத்தன்மையை அறிந்து அந்த உணவை தவிர்த்துவிடலாம். எனவேதான் எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்.

அல்சர் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்ட்டு வந்தால் அவர்களுடைய இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்கள் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது

மேலும் வாழை இலையில் சாப்பிட்டால் உடல் எடை கூடாமல் இருக்கும். நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புச் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments