Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி

உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி
, புதன், 30 ஜூலை 2014 (15:51 IST)
நாம் பல உடற்பயிற்சிகளை கேள்விப்பட்டு இருக்கிறோம். சில பேர் பலவித பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றோம். எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது. முக்கியமான செய்தி நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.
 
நீச்சலின் பயன்கள்:
 
நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிற்சியும் தான்.
 
தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
 
கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
 
நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
இரத்த ஓட்டம் சீராகிறது.
 
நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
 
ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும்.
 
உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும்.

நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
 
சிறந்த முதலுதவிக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.
 
ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
 
ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப் பகுதிகளும் இயங்குகிறது.
 
நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
 
நுரையீரலை வலுவடையச் செய்யும்.
 
ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
 
உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
 
செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறைப் போக்கும். நன்கு பசியைத் தூண்டச் செய்யும். மலச்சிக்கல் நீங்கும்.
 
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.
 
ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 
தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 
நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.
 
நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கை, கால்களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 
அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கை, கால்களை அசைத்து நீந்த வேண்டும்.
 
பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
 
நீச்சல் பயிற்சியை அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
 
குறிப்பாக குழந்தைகள் படிக்கும்போதே பெற்றோர்கள் நீச்சல் கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil