Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌‌'ஹூ‌க்கா'வும் உடல் நலத்திற்கு தீங்கானதே : ஆய்வு!

‌‌'ஹூ‌க்கா'வும் உடல் நலத்திற்கு தீங்கானதே : ஆய்வு!

Webdunia

, புதன், 17 அக்டோபர் 2007 (12:54 IST)
புகை‌யிலை எ‌ன்பதே உட‌ல்நல‌த்‌தி‌ற்கு ‌கேடானது எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், த‌ண்‌ணீ‌ர் வ‌ழியாக வடிக‌ட்டி‌ப் புகை‌பிடி‌க்கு‌ம் 'ஹ‌ூ‌க்கா'‌வினா‌ல் பா‌தி‌ப்பு குறைவுதா‌ன் எ‌ன்ற கரு‌த்து தவறானது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெ‌ரி‌க்காவை‌ச் சே‌ர்‌ந்த கோ‌க்ரே‌ன் ஆ‌ய்வாள‌ர்க‌ள் உலக‌ம் முழுவது‌ம் புகை‌யிலை எ‌தி‌ர்‌ப்பு‌‌ப் பிரச்சாரம் செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.
இவ‌ர்க‌ள், மே‌ற்க‌த்‌திய நாடுக‌ளி‌ல் புகை‌பிடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் எ‌ந்த அள‌வி‌ற்கு‌க் குறை‌ந்து‌ள்ளது எ‌ன்று ஆ‌ய்வு நட‌த்‌தின‌‌ர். அ‌‌தி‌ல் ‌கிடை‌த்த தகவ‌ல்க‌ள் ‌விய‌ப்ப‌ளி‌ப்பவை.
குடுவை‌யி‌ல் புகை‌யிலையை ‌நிர‌ப்‌பி, த‌ண்‌ணீ‌ர் ‌நிர‌ப்‌பிய குழா‌ய் வ‌ழியாக அத‌ன் புகையை வடிக‌ட்டி இழு‌க்கு‌ம் 'ஹூ‌க்கா' முறை இ‌‌ந்‌‌திய‌த் துணை‌க் க‌ண்ட‌த்‌தி‌ல் ‌பிரபலமானது.
த‌ண்‌ணீரை‌க் கட‌க்கும் போது புகை‌யிலை‌யி‌ன் ந‌ச்சு‌த்த‌ன்மை குறை‌ந்து‌விடு‌ம், எனவே உடலு‌க்கு பா‌தி‌ப்பு ஏ‌ற்படாது எ‌ன்று பர‌வியு‌ள்ள கரு‌த்துதா‌ன் இத‌ற்கு‌க் காரணமாகு‌ம்.
இ‌ந்த முறை, ஹ‌ப்‌பி‌ள்-ப‌ப்‌பி‌ள், ந‌ர்‌கி‌ல்‌ஸ், ‌சீசா, கூஜா, ந‌‌ர்‌க்‌கீலா எ‌ன்று ப‌ல்வேறு பெய‌ர்க‌ளி‌ல் அழை‌க்க‌ப்படு‌கிறது.
அ‌ண்மை‌யி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட ப‌ல்வேறு ஆ‌ய்வுக‌ள் ‌சிகரெ‌ட்டினை ம‌ட்டுமே சா‌ர்‌ந்‌திரு‌ந்தன. இத‌ன்‌விளைவாக 'ஹூ‌க்கா' வை யாரு‌ம் கை‌விட‌வி‌ல்ல.
மே‌ற்க‌த்‌திய நாடுக‌ள் ‌சிகரெ‌ட்டி‌ற்கு எ‌திராக‌த் தடைகளை ‌வி‌தி‌த்தபோது, அ‌ம்ம‌க்க‌ள் வேறுவடிவ‌ங்க‌ளி‌ல் புகை‌யிலையை‌த் தேடி வரு‌கி‌ன்றன‌ர். அவ‌ர்களு‌க்கு 'ஹூ‌க்கா' கைகொடு‌த்து‌ள்ளது.
உ‌ண்மை‌யிலேயே 'ஹூ‌க்கா' ‌வினா‌ல் பா‌தி‌‌ப்பு குறைவா எ‌ன்று ஆ‌‌ய்வாள‌ர்க‌ள் ஆ‌‌ய்வு நட‌த்‌தின‌ர். ஆனா‌ல், அ‌த‌ற்கு எ‌ந்த ஆதாரமு‌‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.
எனவே, 'ஹூ‌க்கா' ‌வி‌‌ற்கு அடிமையானவ‌ர்களை எ‌ப்படி ‌விடு‌வி‌ப்பது, அவ‌‌ர்களு‌க்கு எ‌ன்ன ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பது எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌‌ள் ஆ‌ய்வு நட‌த்‌‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
“ஹூ‌க்கா அ‌திக‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் நாடுக‌ளி‌ல் அத‌ற்கு எ‌திராக எ‌வ்வளவு ‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளன எ‌ன்று தேடினோ‌ம். எ‌ந்த மொ‌ழி‌யிலாவது 'ஹூ‌க்கா' பா‌தி‌ப்புக‌ள் ப‌ற்‌றி‌க் க‌ட்டுரைக‌ள் உ‌ள்ளனவா ‌விசா‌ரி‌த்தோ‌ம். ஆனா‌ல் எதுவு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை'' எ‌ன்று ஆ‌ய்வாள‌ர் வா‌சி‌ம் ம‌‌ஷியா‌க் தெ‌‌ரி‌‌வி‌த்தா‌ர்.
மேலு‌ம், ''த‌ண்‌ணீ‌ர் வ‌ழியாக‌ப் புகை‌யிலை‌யி‌ன் ‌‌புகையை இழு‌‌த்தா‌ல் பா‌தி‌ப்பு குறைவு எ‌ன்று ம‌க்க‌ள் ந‌ம்பு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அ‌ந்த ந‌ம்‌பி‌க்கை‌க்கு எ‌ந்த ஆதாரமு‌ம் இ‌ல்லை.
புகை‌யிலை எ‌ந்த வடிவ‌த்‌தி‌ல் இரு‌ந்தாலு‌ம் அது உடலு‌க்கு ஆப‌த்து எ‌ன்றுதா‌ன் இத‌ற்கு மு‌ன்பு நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
த‌ற்போது, ஐரோ‌ப்‌பிய நாடுக‌ள், வட அமெ‌ரி‌க்க நாடுக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் 'ஹூ‌க்கா' வேகமாக‌ப் பர‌‌விவரு‌கிறது'' எ‌ன்று மா‌ஷியா‌க் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil