Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஜிடேரியன் உணவு, இறைச்சியைக் காட்டிலும், ஆயுளைக்கூட்டுகிறது!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (11:53 IST)
அமெரிக்காவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழக ஆய்வுகளின் படி வெஜிடேரியன் உணவு எடுத்துக் கொள்பவர்கள் ஆயுள் இறைச்சி எடுத்துக் கொள்பவர்களின் ஆயுளை விட அதிகம் என்று தெரிவிக்கிறது.

1970 களிலும் 80களிலும் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழகம் ஆயிரக்கணக்கான செவெந்த் டே அட்வென்டிஸ்ட் கிறிஸ்துவர்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டது. அப்போதே வெஜிடேரியன் உணவு எடுத்துக் கொள்பவர்களின் ஆயுள் அதிகம் என்பது தெரியவந்தது.

வெஜிடேரியன் உணவு வகைகளில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், ஆகியவை தடுக்கப்பெறுவதோடு, உடல் எடை குறியீடு, மற்றும் இடுப்புப் பகுதி பருமன் ஆகியவையும் கட்டுப்பட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வெஜிடேரியன் உணவு வகைகளினால் மூளையின் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2002 ஆம் ஆண்டு தேசிய சுகாதார கழகம் லோமா பல்கலைக் கழகத்தினருக்கு நிதி அளித்து இந்த ஆய்வை மேலும் நடத்துமாறு கூறியது. இந்த ஆய்வு நிறைவை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில் 96,000 பேர்களை ஆய்வு செய்வதில் வந்தடைந்த முடிவுகள் வெஜிடேரிய உணவு பற்றிய தங்களது முடிவுகளை மிகவும் உறுதி செய்வதாக தெரிவித்துள்ளனர்ல்

இந்த ஆய்வுஇல் அமெரிக்க, மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த அத்வெந்து பிரிவு கிறிஸ்தவர்கள், அதாவது மாமிச உணவு எடுத்துக் கொள்ளாதவர்கள் பங்கேற்றனர்.

இதில் வெஜிடேரியன் உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு வந்த ஆண்கள் சராசரியாக 83 வயது வரையிலும் பெண்கள் சரசாரியாக 85 வயது வரையிலும் ஆயுள் நீடித்ததாக தெரியவந்துள்ளது.

அதாவது மற்ற உணவு முறை உள்ளவர்களைக் காட்டிலும் இவர்களது ஆயுள் சுமார் 10 ஆண்டுகள் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் தெரியவந்த மற்ற விவரங்கள் வருமாறு:

இறைச்சி சாப்பிடுபவர்களைக் காட்டிலும் வெஜிடேரியன் உணவு உண்பவர்களின் உடல் எடை சுமார் 30 பவுண்டுகள் வரை குறைவாக உள்ளது.

பாடி மாஸ் இன்டெக்ஸ் என்று கூறப்படும் உடல் எடை குறியீடு அளவுகோல்களின் படி வெஜிடேரியன்கள் இறைச்சியாளர்களை விட 5 யூனிட் எடை குறைவாக உள்ளனர்.

மேலும் இறைச்சியினால் ஏற்படும் அளவுக்கதிகமான உடல் பருமன் ஆபிரிக்க - அமெரிக்க பெண்களின் ஆயுளை 6.2% குறைக்கிறது என்பதும் இந்த ஆய்வின் தக்வலாகும்.

ஆனாலும் வாரம் ஒருமுறை மட்டும் இறைச்சி எடுத்துக் கொள்பவர்கள் அல்லது இறைச்சி உணவுகளை கட்டுக்குள் உண்பவர்களுக்கும் ஓரளவுக்கு நோய்கள் கட்டுப்படுகின்றன என்று இந்த ஆய்வு நம்பிக்கை அளித்துள்ளது.

ஆனாலும் முழுதும் வெஜிடேரியன் உணவு உட்கொள்பவர்களின் ஆரோக்கியத்தை ஆய்வு மூலம் இவர்கள் கண் கூடாக கண்டடைந்ததில் வெஜிடேரியன் உணவின் மகத்துவம் பற்றி நிறைய தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

Show comments