பெண்களை அதிகம் பாதிக்கும் வெரிகோஸ் வெயின்ஸ்!
, வெள்ளி, 27 டிசம்பர் 2013 (15:55 IST)
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு சுருட்டி கொள்ளும் ஒரு வகை நோய். இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சனை என்பது கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது.
இதயம் தான் உடல் உறுப்புக்கள் அத்தனைக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிற முக்கிய இடம்னு எவ்லோருக்கும் தெரியும். இதற்கு கால் நரம்புகளில் உள்ள வால்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை பழுதடைந்தால் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால்களிலேயே தங்கி விடும். தலையிலிருந்து, கால் வரைக்கும் இந்த ரத்தத்தை கொண்டு போகும் ரத்தக் குழாய்களுக்கு வெயின்ஸ்னு பேர். அப்புறம் கார்பன் டை ஆக்ஸைடு கலந்த ரத்தத்தை மறுபடி இதயத்துக்கு கொண்டு வர்றதும் இதே வெயின்ஸ் தான். இப்படி ரத்தம் இதயத்துக்கு போக கால் தசைகளும் கூட பம்ப் மாதிரி உதவி செய்யும். அப்படிப் போகறப்ப, கால்களில் உள்ள நாளங்கள் வீங்கி, புடைச்சுக்கிறதாலயும் ரத்த நாளங்கள்ல உள்ள வால்வுகள் பலவீனமா இருந்தாலும் வெரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.
உடல்பருமன் உள்ளவங்க, கர்ப்பிணி பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்குறவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை இருக்கு. பரம்பரை ரீதியாகவும் குறிப்பிட்ட பெண்கள் இதனால பாதிக்கப்படறாங்க. இதை தடுப்பது மிகவும் கடினமானது. காரணம் மனிதர்கள் கால்களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் மூலம் தடுக்க முடியும்.