புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது பல காலமாக வாய் வார்த்தையில் செயல்படுகின்றது. போன வருஷம் செய்த தப்புகளையும் அபத்தங்களையும் அழித்துவிட்டு இந்த வருஷம் புதிதாக தப்பு ஏதும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்பது தான் அது. யோசித்து பார்த்தால் இந்த பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இதனை நடைமுறை படுத்த வேண்டியது என்பது தான் பெரிய கவலையே. உங்களுக்கான இந்த புத்தாண்டை மன திடத்தோடும், ஆரோகியத்தோடும் தொடங்க சில எளிய வழிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டுள்ளன.நம்மில் பலரிடம் தூக்கத்தை தள்ளி வைத்து அந்த நேரத்தில் செய்ய கூடிய சில வேலைகளால் உலகையே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். தூக்கத்தை தள்ளிவைப்பது என்பது உண்மையில் உங்கள் உடலுக்கு நீங்கள் பிறதிடம் வாங்கும் கடன் போல நினைக்க வேண்டியது. நல்ல தூக்கமின்மை நமக்கு நீரிழிவு நோய், உடல் பருமன், மன உளைச்சல் போன்ற பல பின்விளைவுகளை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த ஆண்டு வரும் தூக்கத்தை தள்ளி போடாதீர்கள். அதே சமையம் நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.உடல் ஆரோகியத்திற்கு முக்கிய தேவை வைட்டமின் டி, இது மிகவும் எளிதாக அனைவருக்கும் பாரபட்ச்சம் பாராமல் கிடைப்பது. காலை 7 மணிக்குள் நீங்கள் சூரியனிடமிருந்து பெருகின்ற வைட்டமின் டி, நாள் முழுவதிலும் ஆன உற்ச்சாகத்தை தந்துவிடும். சிலர் வெயிலில் நடந்தால் கறுத்து விடுவோம் என்றெல்லாம் நினைத்து சூரியனை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்கள். இந்த மனபோக்கை விட்டுவிட்டு காலையில் சூரியனை உங்கள் நண்பன் போல பாவித்து ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள். இந்திய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பிரச்சனை இருக்கின்றது. மாதவிலக்கு, வெறும் காலில் வீட்டில் நடப்பது, போதிய இரும்பு சத்து குறைபாடு என இதற்கு பல காரணங்கள் உண்டு. இதனை தவிர்க்க வெல்லம், பேரிட்ச்சை, கீரைகள் போன்றவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து கொண்டாலே போதுமானது. அது மட்டும் அல்லாமல் இத்தகைய இரும்பு சத்து நிறைந்த இயற்கை உணவுகள் மனதையும் உடலையும், நாளடைந்த ஆரோகியத்தை தரும்.
சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ள மாரடைப்புகள் அனைத்தும் நாம் நமக்கு அளித்துகொள்ளும் சுய தண்டனையாக இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்றுவரை உட்கொண்ட துரித உண்வுகளை ஒழித்துக்கட்டுங்கள்.
அடுத்தது நடைப்பயிற்ச்சி, தினமும் நடங்கள், என்ன ஆனாலும் நடங்கள். ஆயிரம் வேலைக்கு நடுவே கொஞ்சாமாவது நடக்க பழகுங்கள். இது உங்கள் முதுமையை இளமையாக கொண்டாட உதவும். அடுத்ததாக உங்கள் சுவாசத்தை கவனியுங்கள், உடல் ஆரோகியம் என்பது நம் உள்ளங்கையில் தொடங்குகிறது. அதனால் உங்கள் கையை தங்க நகை போலவே பாவித்து வாருங்கள். பின்னர் உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பேணுங்கள். இதன் மூலம் வரகூடாத நோய்கள் எல்லாம் வரவே வராது. டூத் பிரெஷை தேய தேய உபயோகிக்காதீர்கள். அது உங்கள் முகத்தை சுளிக்க வைக்கும் முன்னர் தூக்கி வீசுங்கள். நம்மில் பலர் தலை முடிக்காக மருத்துவரிடம் செல்வோமே தவிர வாய்க்காக பல் மருத்துவரை நாடுவதே இல்லை. உங்கள் பற்களை உறுதி செய்ய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பல் மருத்துவரை நாடுங்கள்.நாகரிகத்தின் பரிசாக நமக்கு கிடைத்திருக்கும் உயிர் கொல்லி நோய்களை மறக்காதீர்கள். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ், உயர் கொழுப்பு சத்து , மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இவைகள் அனைத்தும் பல சமையம் நம்மை அறிகுறிகள் காட்டாமல் சோதித்து விடும், இந்த நோயை பற்றி நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டு கொண்டே இருந்தாலும். பாதிப்பிற்கு பின்னரே அதனை பற்றி கவலைப்படுகின்றோம். இவற்றிலிருந்து தப்பிக்க நாம் மேலே குறிப்பிட்டுள்ள சில பழக்கவழக்கங்கள் ஒழுங்குபடுத்தினாலே போதும். இறுதியாக உங்கள் இதயத்தை கவனியுங்கள், சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ள மாரடைப்புகள் அனைத்தும் நாம் நமக்கு அளித்துகொள்ளும் சுய தண்டனையாக இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்றுவரை உட்கொண்ட துரித உண்வுகளை ஒழித்துக்கட்டுங்கள். மேலும் அதிக கொழுப்பு நிறைந்த உணவு, புகைபிடித்தல், மது அறுந்துதல், மன அழுத்தம், உடலை எப்போதும் மந்த நிலையில் வைத்திருத்தல் போன்ற விஷயங்களை மாற்றி அமையுங்கள். உற்சாகமாக இருப்பதை வாழ்க்கை குறிகோளாக மாற்றுங்கள். இதயத்துக்கு நல்ல உணவை அளியுங்கள். இதயத்தை வருடத்திற்கு ஒரு முறை கவனித்து உங்கள் ஆயுளை ஆரோகியமாக இளமையுடம் வாழுங்கள். புது நோட்டு வாங்கும் போது அழகாக எழுத வேண்டும் என்று முதல் இரண்டு பக்கம் எழுதிவிட்டு, பிறகு கோழிக் கிறுக்கலாகப் போகும். அடுத்த புது நோட்டு வாங்கும் வரை. அது போல தீர்மானத்தை கடைப்பிடிப்பதை இரண்டு நாட்கள் செய்து, தூக்கி வீசாமல், தொடருங்கள். புத்தகம் கிழிவதும், ஆண்டின் இறுதியில் காலெண்டர் கிழிவதும் வேறு வேறு விஷயமாகவே தெரியும். ஆனால் இரண்டுமே ஒன்று என்பதை மனதில் கொண்டு புத்தாண்டை முழு மனதுடன் ஆரோகியமாக தொடங்குங்கள்.