Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையா?

சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையா?
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (17:46 IST)
இன்றைய வளர்ந்து விட்ட நாகரீக காலத்தில் சிறுநீர் தொற்று (Urine infection) என்பது 50 விழுக்காட்டினருக்கு உள்ளது என்றே கூறலாம்.

அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இத்தகைய தொற்று ஏற்படுவது வெகுசாதாரணமாகி விட்டது.

ஆண் குழந்தைகளில் 10 பேரில் 4 பேருக்கு இந்த தொற்று இருப்பதால், பல நேரங்களில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடுகிறது.
குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் எல்லா குழந்தைகளும் கழிவறையில் சென்று சிறுநீர் கழிக்கும் போது பரவும் தொற்றானது பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பல நேரங்களில் சிறுநீர் கழித்த பின், சிறுநீரகக் குழாயிலேயே தங்கும் சிறுநீர் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.

சிறுநீரகத் தொற்று என கண்டறிந்தவுடனேயே உரிய குழந்தைகள் மருத்துவரை அணுகி அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் என்றால், தேவைப்பட்டால், சிறுநீர்க் குழாய் முன் தோல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். சிறுநீர் கழித்த பின் சுத்தமான தண்ணீரில் கழுவும் பழக்கத்தைக் கொண்டிருத்தல் அவசியம்.

குழந்தைகளைப் பொருத்தவரை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவும் வழக்கத்தை கற்றுத் தருதல் அவசியம்.

சில குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சலுடன், சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் ஏற்படலாம்.

குழந்தைகளிடம் அறிகுறிகளைக் கேட்டறிந்து மருத்துவர்களிடம் கூறுங்கள். முதலில் காய்ச்சலுக்கும், பின்னர் சிறுநீர் தொற்றுநோயைக் குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள்.

இதுபோன்ற தொற்று தொடரும் நிலையில், மருத்துவரின் ஆலோசனைபடி தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையை செய்து கொள்தல் அவசியம்.

எனவே சாதாரண சிறுநீர் தொற்றுதானே என்று நினைத்து அலட்சியமாக இருந்து விடாதீர்கள். நோய்க்கேற்ப அதற்குரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil