Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உலக இருதய தினம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2012 (16:59 IST)
2020 ஆம் ஆண்டு உலக அளவில் இருதய நோயால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் எ‌ன் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இந்தியா‌வி‌ல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இறப்பிற்கு இருதய நோயே காரணமாக உள்ளது. இதன் அடிப்படையில் உலக இருதய தினமான இன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் இதயத்துக்காக கவனம் செலுத்த வேண்டிய நல்ல நேரம் இது. இந்திய நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இதய நோய்கள் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் 40 வயதுக்கு உட்பட்டவர்களே இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

மரபணு ரீதியாக ஏற்பட்டு வந்த இருதய நோய் இப்போது நாம் கையாளும் பழக்க வழக்கங்களால் வாழ்க்கை முறைப்படியான நோயாக மாறியுள்ளது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வல்லுனர்கள் ஐந்து வழிமுறைகளை பின்பற்ற வழிவகுகின்றனர்.

அவை, தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும ்; தொலைக்காட்சி முன் குறைந்த நேரத்தையே செலவிட வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உயர் ‌புரூ‌க்டோஸ் உணவுகளை தவிருங்கள்; பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளி‌‌ர்பானங்களில் உள்ள உயர் ட்ரை கி‌‌‌‌‌ளிசராய்ட் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புகையை தவிர்க்கவும் ; புகை பழக்கம் இதயத்தின் தமனிகளை பாதித்து குறுகலாக செய்கிறது. புகை இலையில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும், இவை நாளடைவில் பெரிய பாதிப்பை கொண்டுவரும். மேலும் புகை பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவி‌ர்பது அவசியம்.

நல்ல தூக்கம்; தூக்கமின்மை என்பது மனதளவிலும் உடலளவிலும் உபாதைகளை கொண்டு வரும். மேலும் இருதய தமனிகளில் கால்சியம் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் ‌பிளேக், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தாலே இருதய நோய் வருவதிலிருந்து 60 சத‌வீத‌ம் தப்பிக்க முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

Show comments