அளவிட முடியாத நன்மைகளை அள்ளித்தரும் பீன்ஸ்
, வெள்ளி, 21 மார்ச் 2014 (14:36 IST)
இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.
புற்றுநோயைத் தடுக்கும்!பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும்!இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.