Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ச்ஐ‌வி பரவ வா‌ய்‌ப்‌பி‌ல்லை

Webdunia
வியாழன், 30 ஜூலை 2009 (14:22 IST)
எ‌ச்ஐ‌வி நோ‌ய் ஒர ுவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு பரவு‌ம் நோ‌ய் தா‌ன் எ‌ன்றாலு‌ம், எ‌ச்ஐ‌வி பா‌தி‌த்தவ‌ர்களுட‌ன் பே‌சினாலோ, பழ‌கினாலோ, ஒ‌ன்றாக சா‌ப்‌பி‌ட்டாலோ எ‌‌ல்லா‌ம் எ‌ய்‌ட்‌ஸ் பர‌வி ‌விடாது. எனவே ந‌ம்மை‌ப் போ‌ல் அவரு‌ம் ஒரு ம‌னிதரே எ‌ன்ற உண‌ர்வுட‌ன் பாச‌ம் கா‌ட்டி எ‌ய்‌ட்‌‌ஸ் நோயா‌ளிகளை வாழ ‌வ‌ழி ‌விடு‌ங்க‌ள்.

எ‌ச்ஐ‌வி பின்வரும் முறைகளினால் பரவுவதில்லை

1. கைகுலுக்குதல்
2. முத்தம் கொடு‌ப்பது, மு‌த்த‌ம் பெறுவது
3. தும்முதல், இருமுதல்
4. உணவு மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
5. கட்டித் தழுவுதல்
6. விளையாடுதல்
7. புகை வண்டி மற்றும் பேருந்தில் பயணம் செய்தல்
8. ஒரே அறையில் தங்குதல்
9. பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துதல்
10. கொசுக்கடி மற்றும் பூச்சிகள்
11. நா‌ம் எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவரு‌க்கு இரத்த தானம் செ‌ய்வது
12. விய‌ர்வை, கண்ணீர, சிறுநீர் ஆகியவற்றின் மூலம எ‌ய்‌ட்‌ஸ் பரவுவ‌தி‌ல்லை.

webdunia photo
WD
பெரு‌ம்பாலு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை ‌விட மன ‌ரீ‌தியாகவே அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள். இ‌‌ந்த நோ‌ய் தா‌க்குத‌ல் ஒருவரு‌க்கு எ‌ப்படி வே‌ண்டுமானாலு‌ம் வ‌ந்‌திரு‌க்கலா‌ம். ஆனா‌ல் இது பா‌லிய‌ல் நோ‌ய் எ‌ன்று‌ம், உ‌யி‌ர் கொ‌ல்‌லி எ‌ன்று‌ம் மு‌த்‌திரை‌க் கு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ப்பதா‌ல் எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிகளை அறுவறு‌ப்புட‌ன் பா‌ர்‌க்கு‌ம் ஒரு நடைமுறை உ‌ள்ளது.

இது மு‌ற்‌றிலு‌ம் தவறு, எ‌ந்த வகை‌யிலு‌ம் தவறான செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடாத மனை‌வி‌க்கு த‌ன் கணவ‌ர் மூலமாக எ‌ய்‌ட்‌ஸ் பரவ வா‌ய்‌ப்பு‌ண்டு, ஒ‌ன்று‌ம் அ‌றியாத அ‌ந்த தா‌‌ய்‌க்கு‌ப் ‌பிற‌க்‌கு‌ம் குழ‌ந்தை‌க்கு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் இரு‌க்க வா‌ய்‌ப்பு‌ண்டு. எனவே எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிகளை வெறு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விட வே‌ண்டு‌ம்.

குடு‌ம்ப‌த்‌தி‌ல் ஒருவரு‌க்கு எ‌ய்‌‌ட்‌ஸ் எ‌ன்றா‌ல் அவரை ஒது‌க்காம‌ல் அவரு‌க்கு த‌ன்ன‌ம்‌பி‌க்கை அ‌ளி‌த்து அவரை வாழு‌ம் வரை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ ‌விடு‌ங்க‌ள்.

பொதுவாக எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்த ஒருவ‌ர் ச‌ரியான மரு‌ந்துகளையு‌ம், பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌த்தா‌ல் அ‌திகப‌ட்சமாக 12 ஆ‌ண்டுக‌ள் வரை உ‌யி‌ர் வாழலா‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம். எனவே வாழ வ‌ழிகா‌ட்டு‌ங்க‌ள். அ‌ல்லது வ‌ழி‌விடு‌ங்க‌ள்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments