நட்பு : கலீல் கிப்ரான்...
தமிழில் : இரா. முத்துக்குமார்
நட்பு பற்றி பேசு என்றதும் அந்த இளைஞன் கூறினான் :
உங்கள் நண்பன் உங்களின் தேவைகளுக்கான விடை.
நீங்கள் அன்புடன் விதை தூவி நன்றியுடன் அறுவடை செய்யும் உங்கள் வயல் அவனே.
மேலும் அவன் ஒரு தங்குமிடம், அவன் ஒரு வாழ்விடம்.
நீ பசியுடன் அவனை அணுகும்போது உன் அமைதிக்காக அவனை நாடுகிறாய்.
உங்கள் நண்பன் திறந்த மனத்துடன் பேசும்பொது உங்கள் மனத்திலிருக்கும் எதிர்மறை உணர்வுக்கு நீங்கள் அஞ்சுவதில்லை, மனதிலிருக்கும் "என்றென்றும்" என்ற வார்த்தையையும் நீங்கள் பிடித்துக் கொள்வதில்லை.
அவன் மௌனமாக இருக்கும்போது அவன் இதயத்தை உங்கள் இதயம் கவனிப்பதில்லை;
நட்பில் எப்போதும் எல்லா எண்ணங்களும், எல்லா ஆசைகளும், எல்லா எதிர்பார்ப்புகளும் வார்த்தைகளின்றியே பிறந்து வார்த்தைகளின்றியே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
நண்பனை பிரிந்தால் வருத்தமடையாதீர்கள்;
அவனில் நீங்கள் நேசித்தது அவன் பிரிவில்தான் தெளிவாகும், சமவெளியில் உள்ளவனுக்கு மலை தெளிவாக இருப்பது போல்.
நட்பிற்கு எந்த நோக்கமும் இல்லாமலேயே இருக்கட்டும்.
தன்னுடைய அன்பின் புதிரை தேடும் அன்பு ஒரு போதும் அன்பாக இருக்கமுடியாது ஆனால் அது ஒரு வலையை ஏற்படுத்துகிறது. இதில் லாபமற்ற ஒன்று மட்டுமே இதில் சிக்கும்.
உன்னுடைய சிறந்தது உன் நண்பனுக்காக இருக்கட்டும்.
உன் அலையின் எழுச்சியும் தணிவும் அவனுக்கு தெரிவது அவசியமெனில் அவன் வெள்ளத்தையும் தெரிந்து கொள்ளட்டும்.
உன் நேரத்தைக் கொல்ல நண்பனை தேடாதே
நேரத்தை வாழ அவனை எப்போதும் தேடு.
அவன் உனது தேவையை பூர்த்தி செய்பவன். உன் வெறுமைக்கு வடிகால் அல்ல.
நட்பின் இனிமையில் சிரிப்பு தவழட்டும், இன்பங்களை பகிரட்டும்.
சிறு சிறு புற்களில் மீதான பனித் துளி போல் இதயம் தன் காலையை உணர்ந்து புத்துணர்வு பெறட்டும்.
(அவரது தி ப்ராஃபெட் தொகுப்பிலிருந்து)