Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 ஆம் ஆண்டின் கோலிவுட்டின் டாப் 10 ஹிட் மூவீஸ் லிஸ்ட்...

Arun Prasath
சனி, 21 டிசம்பர் 2019 (12:14 IST)
கோலிவுட்டில் 2019 ஆம் ஆண்டு வெளியான டாப் 10 ஹிட் லிஸ்ட் படங்களில் எது முதலிடத்தை தக்கவைத்துள்ளது என பார்க்கலாம்


10.காப்பான்


சூர்யா, ஷாயிஷா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளிவந்த காப்பான் திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு ஜனரஞ்சக சினிமாவாக வெற்றி பெற்றது. எனினும் இந்த திரைப்படத்தில் சில இழுபறி காட்சிகள் ஆடியன்ஸ் மத்தியில் கொஞ்சம் கடுப்பைத் தான் ஏற்றியது. எனவே டாப் 10 ஹிட் லிஸ்ட்டில் பத்தாவதாக இடம்பிடித்துள்ளது காப்பான்.

9.நம்ம வீட்டு பிள்ளை

 சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. அண்ணன் தங்கச்சி பாச காட்சிகள் இதயங்களை உருகவைத்தாலும் சில காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதித்து தான் பார்த்தது. எனினும் மக்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. எனவே டாப் 10 ஹிட் லிஸ்டில் ஒன்பதாவதாக இடம்பிடித்துள்ளது நம்ம வீட்டுப் பிள்ளை

8.தில்லுக்கு துட்டு 2

 சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இதன் முதல் பாகம் மக்களை சிரிப்பலையில் மூழ்கடித்த நிலையில், அதற்கு சற்றுக்கும் குறைவில்லாமல் இரண்டாம் பாகத்தில் அசத்தலான நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன. டாப் 10 ஹிட் லிஸ்டில் எட்டாவது இடத்தில் தில்லுக்கு துட்டு திரைப்படம் இடம்பிடித்துள்ளது

7.தடம்

 அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் தடம். மிகவும் சுவாரஸ்யமான் திரைக்கதை கொண்டு ஆடியன்ஸை சீட் எட்ஜில் உட்காரவைத்தாலும், லேசாக ஆங்காங்கே பிசிறு தட்டவும் செய்தது. டாப் 10 ஹிட் லிஸ்டில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது தடம்.

6.சூப்பர் டீலக்ஸ்

 விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோரின் நடிப்பில் தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். ஜனரஞ்சக சினிமாக்களில் ஒரு வித்தியாசமான முயற்சியை திரைக்கதைக்குள் புகுத்தி ஆடிய்ன்ஸின் மத்தியில் ஓவ்வொறு ஃப்ரேமும் கிளாப்ஸ் வாங்கிய திரைப்படம் என இதனை கூறலாம். டாப் 10 லிஸ்டில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது சூப்பர் டீலக்ஸ்

5.கைதி

 கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் கைதி. வித்தியாசமான திரைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட ஒவ்வொறு காட்சியும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. குறிப்பாக பாச காட்சிகள் ஜனரஞ்சக ரசிகர்களை உருகவைத்தது. டாப் 10 ஹிட் லிஸ்டில் கைதி திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

4.பிகில்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் பிகில். மூன்று வேடங்களிலும் மாஸ் காட்டும் விஜய், அனல் தெறிக்கும் வசனங்கள், அருமையான பாடல்கள் பெண்களின் ரசிக்கவைக்கும் ஃபுட் பால் மேட்ச் என தீபாவளியை கலைகட்ட வந்த திரைப்படம் போல் அமைந்தது. டாப் 10 ஹிட் லிஸ்ட்டில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது பிகில்.

3.பேட்ட

 ரஜினிகாந்த், சிம்ரன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் பேட்ட. முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகள், பாடல்கள், பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் ட்ரீட்டாக அமைந்தது. டாப் 10 லிஸ்டில் பேட்ட திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

2.அசுரன்

 தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் அசுரன். சமூக அக்கறை கொண்ட ஜனரஞ்சக சினிமாக்களில் இது பெரும் விவாதத்தையே கிளப்பியது என கூறலாம். மேலும் சினிமா ரசிகர்களிடமும் வெகுவாக சென்று சேர்ந்து சிறந்த வெற்றிப்படமாகவும் அமைந்தது. டாப் 10 லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளான் அசுரன்

1.விஸ்வாசம்

 அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். வழக்கமான அஜித் திரைப்படம் போல் இருந்தாலும் தந்தை மகள் பாசத்தால் குடும்பம் குடும்பமாக திரையரங்கங்களுக்கு விரைந்து ஆதரவு தந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த வருடத்தில் பெண்களின் மனதில் பதிந்த திரைப்படமாகவும் இதனை கூறலாம். டாப் 10 லிஸ்டில் விஸ்வாசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments