Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விப்ரோ நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் காலாண்டு லாபம் ரூ.2,480 கோடி

விப்ரோ நிறுவனத்தின்  தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் காலாண்டு லாபம் ரூ.2,480 கோடி
, வியாழன், 21 ஜனவரி 2016 (10:50 IST)
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு லாபம் ரூ.2,480 கோடியாக உள்ளது.


 

 
இது குறித்து விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 
 
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வருவாய் 9 சதவீதம் அதிகரித்து ரூ 12,310 கோடியாக உள்ளது. நிகர வருவாய் 2 சதவீதம் உயர்ந்து ரூ.2,230 கோடியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு லாபம் ரூ.2,480 கோடியாக உள்ளது.
 
இதே கால அளவில் பணியாளர்களின் எண்ணிக்கை 2,268 அதிகரித்து மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 1,70,664 ஆக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil