Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் பங்குகளை ஃபேஸ்புக் ஏன் வாங்கியது?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (12:10 IST)
இந்தியாவின் பிரபல செல்போன் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை ஃபேஸ்புக் ஏன் வாங்கியது என காரணம் வெளியாகியுள்ளது. 
 
நிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து பேசியுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகளோடு பேஸ்புக் நிறுவன சேவைகளையும் இணைத்து மக்களுக்கு எளிய முறையில் சில சேவைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஆனால், முதலீட்டின் அங்கமாக ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவை வணிக ரீதியில் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் புதிய வணிக வியாபாரமான ஜியோமார்ட் தளத்தை வாட்ஸ்அப் கொண்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments