Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”ஸ்பூப் நம்பர்”: வாட்ஸ்ஆப் போலி அக்கவுண்ட் பற்றி தெரியுமா??

”ஸ்பூப் நம்பர்”: வாட்ஸ்ஆப் போலி அக்கவுண்ட் பற்றி தெரியுமா??
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:00 IST)
பேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, வாட்ஸ்ஆப் ஆக இருந்தாலும் சரி எந்தவொரு பிளாட்பார்மிலும் ஒரு போலியான அக்கவுண்ட்டை உருவாக்குதல் என்பது மிகவும் எளிதான காரியமாகும். 

 
உருவாக்கம் பெறுவது எளிமையாக இருப்பினும் அது சில நேரங்களில் போலி மற்றும் ஒரு உண்மையான அக்கவுண்ட் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான வேறுபாட்டை கண்டறிவது சற்று கடினமானது. 
 
ஸ்பூப் நம்பர்: 
 
பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெறுகின்றன. இதில், அது அமெரிக்க எண்களாய் இருக்க அதிக வாய்ப்புள்ளது. 
 
யாரோனும் +1 என்று தொடங்கும் ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் பெற்றால் அது ஒரு விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) ஆப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. +1 என தொடங்கும் எந்தவொரு எண்ணும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
 
அதேபோல் +44 எனத் தொடங்கும் எண்ணில் இருந்து மெசேஜ் பெற்றால் அதுவும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. அவைகள் அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்.
 
கிடைக்கப்பெறும் மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் புகைப்படத்தில் ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவர படம் இருந்தால் மற்றும் சில நிமிடங்களுக்கு முன்பே மாற்றப்பட்ட ஸ்டேட்டஸ் கொண்டிருந்தால் அதுவொரு போலியான அக்கவுண்ட் ஆக இருக்க கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் அடுத்தடுத்து தீக்குளிப்பு: அதிரும் கட்சி தலைமை