Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸ் ஆப்-ன் ஒன்பது புதிய வசதிகள்

வாட்ஸ் ஆப்-ன் ஒன்பது புதிய வசதிகள்

வாட்ஸ் ஆப்-ன் ஒன்பது புதிய வசதிகள்
, சனி, 23 ஜூலை 2016 (11:35 IST)
வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் சேவையில் மேலும் ஒன்பது புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.



வாட்ஸ் ஆப்:

2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை, வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.

தற்போது அது கீழ்காணும் வசதிகளை அறிமுகப்படுத்திள்ளது.

கால் பேக்:

இந்த ஆப்ஷன் வாட்ஸ்ஆப் கால் துண்டிக்கப்பட்டவுடன் திரையில் தோன்றும். இது வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் மெயில்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும். இதனை பயன் படுத்த சாட் பாக்ஸ் அருகில் இருக்கும் மைக் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

கோட்ஸ்:

மேற்கோள் காட்டும் அம்சம் தான் வாட்ஸ்ஆப் ஆங்கிலத்தில் கோட்ஸ் எனக் குறிப்பிடுகிறது. இதன் மூலம் தகவல்களை பரிமாறும் போது குறிப்பிட்ட தகவல்களை மேற்கோள் செய்ய முடியும்.

ஃபான்ட்ஸ்:

வாட்ஸ்ஆப் தெரியும் எழுத்துக்கள் பல்வேறு விதங்களில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மியூசிக் ஷேரிங்:

வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது செயலியில் பாடல்களை மற்ற கருவிகளுடன் பகிர்ந்து கொள்ள மியூசிக் ஷேரிங் ஆப்ஷனை அறிமுக படுத்தியுள்ளது. இது ஆப்பிள் மியூசிக் சேவைகளிலும் வேலை செய்யும்.

க்ரூப் இன்வைட்:

க்ரூப் இன்வைட் ஆப்ஷன், ஃபேஸ்புக் மென்ஷன்ஸ் போல வேலை செய்யும். இதைக் கொண்டு க்ரூப் மெசேஜிங் செய்யும் போது ஒருவரின் மெசேஜ்களை மட்டும் தனியே பிரிக்கத் தகவல்கள் வேறு நிறத்தில் தெரியும்.

ஜிஃப்:

ஐஓஎஸ் இயங்குதளங்களில் மட்டும் ஜிஃப் வசதி வழங்கப்படுகிறது.

பிக் எமோஜி:

வாட்ஸ்ஆப்-இல் எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் அது சிறிய அளவில் இருப்பதால், இன்னும் பெரிய அளவு எமோஜிக்கள் வழங்கப் படுகிறது.

வீடியோ காலிங்:

பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட வீடியோ காலிங், அப்டேட்களில் நீக்கப்பட்டது எனினும் விரைவில் இந்த வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெய்-யை காணவில்லை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு