போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு..

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:14 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. 
 
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போது டிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இது குறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு...
 
இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். 
 
இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
 
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. 

புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகங்க பின்னாடி போய் வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க!.. ரஜினி திடீர் அட்வைஸ்!..

இனிமேல் நம்ம இஷ்டத்துக்கு நியூஸ் எழுத முடியாது: கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடி

ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய போறீங்களா? ஒரு ரூபாய் கூட கிடைக்காது., முழு பணமும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்கா - ஈரான் போர் நின்றுவிட்டது.. ஆனால் இன்னொரு போரை தொடங்குகிறதா வடகொரியா?

இன்று திருநெல்வேலி.. நாளை கடலூர்!.. விஜயின் பிரச்சார திட்டம் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments