Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

Mahendran
வெள்ளி, 1 நவம்பர் 2024 (10:28 IST)
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகளையும் எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கிறது.

எனவே, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சிலிண்டரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மக்களால் இரண்டு வகையான எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை அடிக்கடி மாற்ற மாட்டார்கள். ஆனால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாவு சிலிண்டரின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே சொல்லும்.

அந்தவகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகரித்திருக்கிறது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 1964 ரூபார் 50 காசாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் 818 ரூபாய் 50 காசு என்கிற நிலையில் நீடிக்கிறது.

ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இப்போது வணிக பயன்பாடுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்து செல்வது வணிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments