Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தின் விலை திடீரென சரிந்தது

தங்கத்தின் விலை திடீரென சரிந்தது
, திங்கள், 26 அக்டோபர் 2015 (06:03 IST)
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை திடீரென சரிந்தது.
 

 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 544க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 352க்கும் விற்பனை செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், தங்கத்தின் விலை திடீரென குறைந்தது. அதன்படி,  கிராமுக்கு ரூ.18ம், பவுனுக்கு ரூ.144ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 526க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 208க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. 

Share this Story:

Follow Webdunia tamil