Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைத் தொடர்புத் துறை ஏர்டெல்-ஏர்செல் 4ஜி அலைக்கற்றை ஒப்பந்தத்திற்கு அனுமதி

தொலைத் தொடர்புத் துறை ஏர்டெல்-ஏர்செல் 4ஜி அலைக்கற்றை ஒப்பந்தத்திற்கு அனுமதி

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (11:23 IST)
பார்தி ஏர்டெல்-ஏர்செல் நிறுவனங்களுக்கிடையிலான 4ஜி அலைக்கற்றை வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
 


 


பார்தி ஏர்டெல்-ஏர்செல் நிறுவனங்களுக்கிடையே ரூ.3,500 கோடி மதிப்பிலான அலைக்கற்றை வர்த்தக ஒப்பந்தத்துக்கு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜூலை 4-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்பட தமிழகம், பிகார், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், அஸ்ஸாம், வட கிழக்கு ஆகிய ஆறு தொலைத் தொடர்பு வட்டங்களில் ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள 4ஜி அலைக்கற்றையை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

இதற்காக, சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தேவையான ஒப்புதல்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. மேலும், அலைக்கற்றை வர்த்தகம் தொடர்பான விதிமுறைகள் முழுவதும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆந்திரம், ஒடிசா ஆகிய இரு தொலைத் தொடர்பு வட்டங்களுக்கான 4ஜி அலைகற்றை பயன்பாட்டு உரிமையை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும்போது அது குறித்து பங்குச் சந்தைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments