Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 இலக்க மொபைல் எண்கள் விரைவில் அறிமுகம்!!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (12:48 IST)
மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. 

 
மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்களுக்கு பதிலாக 11 இலக்க எண்களை அறிமுகம் செய்ய மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.
 
கடந்த 2003-ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது.
 
ஆனால் மொபைல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் அசுர வேக வளர்ச்சியால் மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
 
இதனால் மொபைல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு விரைவில் 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments