Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதார் இருக்கா?... இருந்தால் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.1700க்கு.....

ஆதார் இருக்கா?... இருந்தால் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.1700க்கு.....
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (09:59 IST)
இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கான விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
ஆதார்: 
 
இந்தியாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஆதார் அடிப்படையில் எளியத் தவனை முறையினை அமல்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
ரூ.1700 முன்பணம்: 
 
அதன் படி ஆதார் அட்டைக் காண்பித்து ரூ.1700 எனும் முன்பணத்தைச் செலுத்தி புதிய ஐபோன்களை பெற முடியும். இந்தத் தவனை முறையைச் சாத்தியமாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
 
முன்பதிவு: 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான யுனிகான் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளைத் துவங்கியுள்ளது. புதிய ஐபோன்களை வாங்க முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா:
 
இந்தியாவின் மிகப்பெரிய மின்சாதன நிறுவனங்களாகிய க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன. 
 
விநியோகம்: 
 
ஆப்பிளின் விநியோக நிறுவனமான பீடெல் டெலிடெக் நிறுவனம் புதிய ஐபோன்களை அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்குத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஐவொல்டு மற்றும் யுனிகான் நிறுவனங்கள் அக்டோபர் 7 ஆம் தேதி 12.00 மணி முதல் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன.
 
விலை: 
 
இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த பட்சம் ரூ.60,000 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி.. உன்னை தேடி நான் வருவேன் : வெளிநாட்டுப் பெண்ணின் ஏக்கம் (வீடியோ)