Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

Siva
புதன், 21 மே 2025 (09:59 IST)
நேற்று காலை நேரத்தில் பங்குச் சந்தையில் மிதமான சரிவு இருந்தாலும், அதன்பின் மதியத்திற்கு மேல் மோசமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் நேற்று 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், முதலீட்டாளர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நஷ்டம் அடைந்தனர் என்பதும் முக்கியமான தகவலாகும்.
 
இந்த நிலையில், நேற்று முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தை, இன்று மீண்டும் உயர்ந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்ந்து, 81,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தையான நிப்ட்டியும் 133 புள்ளிகள் உயர்ந்து, 24,815 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, எச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்ரீராம் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, அதானி ஃபோர்ட்ஸ் உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments