Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று போலவே இன்றும் இறங்கிய பங்குச்சந்தை.. எப்போதுதான் விடிவுகாலம்..!

Siva
செவ்வாய், 11 மார்ச் 2025 (12:42 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று காலையில் சென்செக்ஸ்  200 புள்ளிகள் அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், மதியத்திற்கு மேல் திடீரென சரிவுக்குள்ளாகி, வர்த்தக முடிவின்போது சுமார் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்தது. இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைக் கண்டதால், "எப்போதுதான் விடிவு காலம்?" என்று முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். இன்று காலை முதல் பங்குச்சந்தை சரிவடைந்து வந்த நிலையில், தற்போது மும்பை பங்குச்சந்தை 118 புள்ளிகள் சரிந்து 73,998 என்ற புள்ளியில் வர்த்தகம் செய்கிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) மூன்று புள்ளிகள் மட்டும் சரிந்து, 22,400 புள்ளிகளின் அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், டைட்டான், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, ஸ்டேட் வங்கி, ஆசியன் பெயிண்ட் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், டாடா ஸ்டீல், டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், இண்டஸ் இன்ட் வங்கி ஆகிய பங்குகள் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த திருமாவளவன்.. என்ன காரணம்?

தர்மேந்திர பிரதான் உரும பொம்மை எரித்தபோது விபரீதம்: 2 திமுக நிர்வாகிகள் தீக்காயம்..!

ஹலால் போலவே இந்துக்கள் நடத்தும் இறைச்சி கடைகளுக்கு சான்றிதழ்.. மகாராஷ்டிரா அரசு..!

எக்ஸ் தளத்திற்கு எதிராக சதி செய்யும் நாடுகள்.. எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments