Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டிபோட்டு ரூ.2,306 கோடி நஷ்டத்தை சம்பாதித்த ஃபிளிப்கார்ட்!!

போட்டிபோட்டு ரூ.2,306 கோடி நஷ்டத்தை சம்பாதித்த ஃபிளிப்கார்ட்!!
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (10:31 IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனம், கடந்த 2015-16ம் நிதியாண்டில் ரூ.2,306 கோடி நஷ்டத்துடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.


 
 
ஃபிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம்:
 
இந்திய ஆன்லைன் வர்த்தக சந்தையில் முன்னிலை வகிக்கும் ஃபிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 
 
இந்நிறுவனம், பல்வேறு புதுப்புது பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
அமேசானுடன் போட்டி:
 
ஆனாலும், அமேசான் இணையதளத்தின் போட்டியை சமாளிக்கும் விதமாக, ஃபிளிப்கார்ட் மேற்கொண்ட பல்வேறு வர்த்தக விரிவாக்கப் பணிகள் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.
 
இதன்காரணமாக, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2015-16 நிதியாண்டில் லாபம் ஏதுமின்றி, ரூ.2,306 கோடி நஷ்டத்துடன் உள்ளதாக, ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. 
 
இது முந்தைய நிதியாண்டின் முடிவில் இருந்ததைவிட 110% சரிவாகும். 
 
நிறுவனத்தின் விற்பனை 153% உயர்ந்து, லாபம் ரூ.1,952 கோடியாக இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என ஃபிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

65 நாட்களுக்கு பின்னர் வெளியாகும் ஜெ. புகைப்படம்?: ஆசி பெற போகும் புதிய எம்எல்ஏ-க்கள்