Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடூ மற்றும் வாகனக் கடனின் வட்டி விகிதம் குறையும்: இந்திய ரிசர்வ் வங்கி

வீடூ மற்றும் வாகனக் கடனின் வட்டி விகிதம் குறையும்: இந்திய ரிசர்வ் வங்கி
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (16:32 IST)
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான உர்ஜித் பட்டேல் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைச் சுமார் 0.25 சதவீதம் குறைந்துள்ளார்.

 
நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்த ரகுராம் ராஜன் வெளியேறிய காரணத்தால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாணய கொள்கை அமைப்பின் ஆலோசனைப் படி நுகர்வோர் பணவீக்க குறியீட்டை 5 சதவீதம் அளவில் குறைத்துள்ளது.
 
ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்தை குறைத்த நிலையில் வணிக வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என அனைத்து விதமான கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாயப்புள்ளது. மேலும் வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது அறிவித்துள்ள வட்டி விகித குறைப்பு மூலம் ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ரெப்போ விகிதமாக 6.75 சதவீதமாக இருந்தது.
 
இந்த ரெப்போ விகிதம் குறைப்பால் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. தற்போது ரிசர்வ் வங்கி செய்திருக்கும் இந்த வட்டி குறைப்பின் காரணமாக நாட்டில் வர்த்தக மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
 
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைஸ்ஜெட்டில் பண்டிகைக் கால சிறப்பு கட்டண சலுகை