Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி கவர்னர்

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி கவர்னர்
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (12:20 IST)
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கு உரிய வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கு உரிய வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் அவை 8 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ, சிஆர்ஆர் ஆகிய விகிதங்களிலும் மாற்றம் செய்யப்டவில்லை.

ரெப்போ 8 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ  7 சதவீதமாகவும், சி ஆர் ஆர் 4 சதவீதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடன் பத்திரங்கள், தங்கத்தில் வங்கிகள் செய்ய வேண்டிய முதலீட்டளவு குறைக்கப்பட்டுள்ளது. எஸ் எல் ஆர் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை ஜனவரி 2015 ஆம் ஆண்டுக்குள் 8 சதவீதமாகவும், ஜனவரி 2016 ஆம் ஆண்டுக்குள் 6 சதவீதமாக குறைக்கவும் ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.5 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ மழை மேலும் கவலையை அளித்துள்ளது.

பருவமழை தாக்கம் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் சிரமம் ஏற்படும் என்றும் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil